விராட்கோலி ஐ.சி.சி. 20 ஓவர் உலக கனவு அணிக்கு கேப்டன்

ஐ.சி.சி. 20 ஓவர் உலக கனவு அணியின் கேப்டனாக இந்திய அணியின் துணை கேப்டன் விராட்கோலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடந்த 6–வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற அணிகளின் வீரர்–வீராங்கனைகளின் சிறந்த செயல்பாடுகளின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அடங்கிய குழு, ஐ.சி.சி. 20 ஓவர் உலக கனவு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

20 ஓவர் உலக ஆண்கள் கனவு அணியின் கேப்டனாக 3 அரை சதம் உள்பட 273 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருது பெற்ற இந்திய அணியின் துணை கேப்டன் விராட்கோலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹரா அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த (2014) உலக கோப்பை போட்டி தொடர் முடிவில் வெளியான உலக அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட டோனிக்கு இந்த முறை அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த முறை 4 இந்திய வீரர்கள் இடம் பெற்றனர். அது தற்போது இரண்டாக குறைந்து இருக்கிறது.

அதிகபட்சமாக இங்கிலாந்து அணியை சேர்ந்த 4 பேர் அணிக்கு தேர்வாகி இருக்கிறார்கள். பாகிஸ்தான் வீரர்கள் யாருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

பெண்கள் கனவு அணியின் கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஸ்டெபானி டெய்லர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வீராங்கனைகள் யாருக்கும் அணியில் வாய்ப்பு கிட்டவில்லை.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top