ஆந்திராவில் வெயிலின் தாக்கம் அதிகம்; சித்தூர் மாவட்டத்தில் வெயில் கொடுமைக்கு 3 பேர் பலி

VR6ஆந்திராவில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அதேபோல் சித்தூர் மாவட்டத்திலும் வெயில் அதிகமாக உள்ளதால் அனல் காற்று போல் வீசுகிறது. கோடை வெயிலுக்கு பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், பாகாலா மண்டலம் கொத்தவட்டிபள்ளியை சேர்ந்த ஆதியம்மாள் (வயது 65) என்பவர் நேற்று முன்தினம் மாலை மாடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்காக கிராமத்துக்கு அருகே உள்ள ஒரு ஏரிக்கு சென்றார். ஆனால் அவர் மாலை வீடு திரும்பவில்லை.

குடும்பத்தினர் ஏரிக்குச் சென்று பார்த்தபோது, ஏரி பகுதியில் ஆதியம்மாள் மயக்கமடைந்து கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக பாகாலா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வெயில் கொடுமையால் ஆதியம்மாள் இறந்து விட்டதாக கூறினர்.

அதேபோல் வரதய்யபாளையம் மண்டலம் ராசர்லா கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (65). இவர், நேற்று காலை வீட்டின் முன்பு புளிய மரத்துக்கு கீழே புளியம் பழங்களை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக செத்தார். பின்னர் வரவதய்யபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்குள்ள டாக்டர்களும், தனலட்சுமியை பரிசோதனை செய்தனர். அவர், வெயில் கொடுமையால் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

மேலும் விஜயாபுரம் மண்டலம் கலியபாக்கம்மிட்டாகண்டிகை கிராமத்தை சேர்ந்த விவசாயி சிரஞ்சீவிலு (45). இவர், நேற்று காலையில் இருந்து மாலை வரை நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டார். அப்போது அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

பின்னர் வீட்டுக்கு வந்ததும் அவருக்கு திடீரென வாந்தி வயிற்றுப்போட்டு ஏற்பட்டது. சிகிச்சைக்காக பண்ணூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக செத்தார். வெயில் கொடுமையால் சிஞ்சீவிலு இறந்ததாக டாக்டர்கள் கூறினர்.

சித்தூர் மாவட்டத்தில் வெயில் கொடுமைக்கு பொதுமக்கள் அடுத்தடுத்து பலியாகி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top