9வது ஐபிஎல் போட்டி தொடர்: மும்பையில் 8–ந்தேதி தொடக்க விழா

201604021440112356_IPL-season-9-opening-ceremony-to-starts-on-april-8_SECVPFஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்று உள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜஸ் தலா 1 முறையும் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது.

9–வது ஐ.பி.எல். போட்டித் தொடர் வருகிற 9–ந் தேதி முதல் மே 29–ந் தேதி வரை நடக்கிறது.

ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு பதிலாக ரைசிங் புனே, சூப்பர் ஜெய்ன்ட் (புனே), குஜராத் லயன்ஸ் (ராஜ்கோட்) ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

9–வது ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழா மும்பையில் வருகிற 8–ந் தேதி நடக்கிறது.

கண்கவர் தொடக்க விழாவில் இங்கிலாந்தை சேர்ந்த பாப்பேண்ட் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெறும். இந்த குழுவின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

பாலிவுட் நட்சத்திரங்கள் ஜாக்குலின் பெர்னான்டஸ், யோயோ ஹனிசிங், கத்ரினா கயூப், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் நடனமாடுகிறார்கள்.

9–ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை, புனே அணிகள் மோதுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top