இந்தியர்கள் யாரும் ஏமன் நாட்டிற்கு எக்காரணத்தை கொண்டும் பயணம் செய்ய வேண்டாம்: மத்திய அரசு

yeman

கடந்த 4-ம் தேதி ஏமனில் நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் கன்னியாஸ்திரிகள். மிசனரிஸ் ஆஃப் சேரிட்டி சபையைச் சேர்ந்த அந்த நால்வரில் ஒருவர் இந்தியர் ஆவார்.

அதேபோல், கேரளாவை சேர்ந்த பாதிரியார் டாம் உழுநலில் என்பவர் கடந்த 4-ம் தேதியன்று ஐ.எஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டார். டாம் உழுநலிலை சிலுவலையில் அறைந்து கொன்றதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ஏமன் நாட்டில் தற்போதுள்ள பாதுகாற்ற சூழலில் இந்தியர்கள் யாரும் அந்நாட்டிற்கு பயணம் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏமன் நாட்டில் தற்போது கடுமையான தாக்குதல்கள் உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பு இல்லை. மேலும் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

அண்மையில் ஏடன் நகரில் இந்தியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. எனவே அடுத்த அறிவிப்பு வரும்வரை, எத்தகைய சூழலிலும், எந்த காரணங்களுக்காகவும் ஏமன் நாட்டுக்கு இந்தியர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்” என அறிவுறுத்தப்படுகிறது எனக் கூறப்பட்டு உள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top