தேர்தல் ஆணையம் சோம்பேறி ஆணையம்: பிரேமலதா தாக்கு!

பிரேமலதாசிறுதாவூர் பங்களாவில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்து தெரியப்படுத்தியும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததை வன்மையாக கண்டிப்பதாக தேமுதிக தெரிவித்துள்ளது.

திருப்பூரில் நடைபெற்ற தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் இதனைத் தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையம் சோம்பேறி ஆணையம் எனவும் அவர் விமர்சித்தார்.

சிறுதாவூர் பங்களாவில் ஆய்வு மேற்கொள்ளாமல் காலம் கடத்தி வரும் அதிகாரிகள் மீது நீதித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தேமுதிகவைச் சேர்ந்தவர்கள் தாங்களாகவே, திமுகவிற்கு வருவதாக மு.க. ஸ்டாலின் கூறியதை சுட்டிக்காட்டிய பிரேமலதா விஜயகாந்த், வஞ்சகமாக முதுகிற்கு பின்னால் குத்தும் வேலையில் திமுக ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top