தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 130, திமுக 70, மற்றவை 34 இடங்கள்: கருத்துக் கணிப்புகளில் தகவல்!

jayalalitha tn cmதமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 130 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ், இந்தியா டி.வி. – சி ஓட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணிக்கு 70 இடங்களும், பிற கட்சிகளுக்கு 34 இடங்களும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக டைம்ஸ் நவ், இந்தியா டி.வி. – ‌சி ஓட்டர் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற வாய்ப்பில்லை எனவும் இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுக அதிகபட்சமா‌க 39.1 சதவிகி‌‌த வாக்குகளை பெறும் வாய்ப்புள்ளது என அக்கருத்துக்கணிப்பு‌ ‌தெரிவித்துள்ளது.

திமுக 31.8 சதவிகித வாக்கு‌களை‌ கைப்பற்றும் என்றும் அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, பாமக‌ உள்ளிட்ட கட்சிகள் 25 சதவிகித வாக்குகள் பெறும்‌‌‌ என்றும்‌ பாரதிய ஜனதா மற்றும் அ‌‌‌தன் கூட்டணி ‌கட்சி‌கள்‌ 4‌.1‌சதவிகித‌‌‌ ‌‌‌வாக்குகளை கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி 17 இடங்களைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஆளும் என்.ஆர். காங்கிரஸுக்கு 7 இடங்கள் கிடைக்கும் என இந்தியா டி.வி. – சி.ஓட்டர் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மார்ச் மாதம் 4-ஆவது வாரத்தில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top