கருச்சிதைவு செய்கிற பெண்களுக்கு தண்டனை ; டிரம்ப் கருத்தால் அமெரிக்காவில் புதிய சர்ச்சை

Captureஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவதில் தீவிரமாக உள்ள பெரும் கோடீசுவரரான டொனால்டு டிரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வருகிறார்.

அந்த வகையில் அவர் சட்டவிரோதமான வகையில் கருச்சிதைவு செய்கிற பெண்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவில் 1973–ம் ஆண்டில் இருந்து கருச்சிதைவு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்பின் கருத்து பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

கருச்சிதைவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தை டிரம்ப் கொண்டுள்ளார்.

ஆனால் கருச்சிதைவு செய்கிற பெண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற டிரம்பின் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு உருவானது.

இதையடுத்து அவர் பல்டி அடித்து விட்டார். ‘‘கருச்சிதைவு செய்து கொள்கிற பெண்களை தண்டிக்குமாறு கூறவில்லை. கருச்சிதைவினை செய்கிற டாக்டரைத்தான் தண்டிக்க வேண்டும்’’ என கூறி விட்டார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top