மீனவர்கள் 79 பேர் இன்று தமிழம் திரும்பினர்

tamil-fishermenஇலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 79 தமிழக மீனவர்களும் இன்று அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21 மீனவர்களும் அவர்களின் 5 படகுகளும் ராமேஸ்வரம் துறைமுக அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களும் 11 படகுகளும் காரைக்கால் துறைமுகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட மீனவர்களின் 5 படகுகளையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. ஆனால், அதில் 2 படகுகள் சேதமடைந்து கடலில் மூழ்கிய நிலையில், 3 படகுகளை மட்டும் மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்தனர்.

அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்ட நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் கடலில் மூழ்கிய படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top