தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு: ஏப்ரல் 6ல் முக்கிய முடிவு

supreme_court_of_india__large

கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து வரும் ஏப்ரல் 6ம் தேதி முடிவு செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு பின்பற்றும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை ‌ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா‌ ஸ்டீபந்த் ஆகியோர் தலைமயிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் 50 சதவிகித இ‌ட‌ஒதுக்கீட்டையே பின்பற்ற வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ், இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதே சரியாக இருக்கும் என்பதால், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 6ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதற்கான முகாந்திரம் இருக்கிறதா என்று ஆய்வு செய்து, அன்றைய தினமே இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top