இந்திய அணிக்கு நல்ல செய்தி – அரையிறுதி போட்டியில் யுவராஜ் சிங் விளையாட வாய்ப்பு

d6282ee4-5be0-4eba-b6ec-080159cec721_S_secvpfநாளை மும்பையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் வெஸ்ட் இண்டீஸ் மோதுகிறது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட யுவராஜ் சிங் ரன் எடுப்பதற்கு ஓட முடியாமல் தடுமாறினார். தசைபிடிப்பில் இருந்து முழுமையாக குணம் அடையாததால், யுவராஜ் சிங்க்கு பதிலாக கர்நாடகாவைச் சேர்ந்த மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், யுவராஜ் காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்து வருவதாகவும், அதனால் நாளை நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்றாலும், நடுவரிசையில் களமிறங்கும் அவரது அனுபவம் இந்திய அணிக்கு பெரும் பலமாகும். மேலும் பிட்ச் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும்பட்சத்தில் யுவராஜ் சிங்கை தோனி பயன்படுத்தக் கூடும். யுவராஜ் விளையாடாதபட்சத்தில் அவருக்கு பதிலாக களமிறங்க தயாராக இருக்கும் ரகானேவும், மணிஷ் பாண்டேவும் பந்து வீசமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top