பெரியாறு அணை நீர்மட்டத்தை அறிய தேக்கடி படகு துறையில் புதிய அளவுகோல்

mullaiபெரியாறு அணை நீர்மட்டத்தை அளவீடு செய்ய தேக்கடி படகுத்துறை அளவுகோல் மாற்றப்பட்டுள்ளது

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அறிய அணைப்பகுதியிலும், தமிழகத்திற்கு தண்ணீர் வரும் தேக்கடி சுரங்க வாய்க்கால் பகுதியிலும் அளவுகோல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருப்பதால் தமிழகப் பொதுப்பணித்துறை மற்றும் கேரள வனத்துறையினர் மட்டும் செல்ல முடியும். தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்பவர்களும் அணையின் நீர்மட்டத்தை குறித்த தகவலை அறிய முடியாது.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 1979ல் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. தேக்கடி வரும் சுற்றுலாப் பயணிகள் அணையின் நீர்மட்டத்தை அறியும் வகையில் தேக்கடி படகுத்துறையில் அணையின் கிடப்புநீரான 108 அடிக்கு மேல் பீடம் அமைத்து, 35 அடி உயரத்தில் கேரள வனத்துறை சார்பில் அளவுகோல் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 115 அடி முதல் ஒவ்வொரு அடியாக 145 அடி வரை அளவீடு குறிக்கப்பட்டிருக்கும். தேக்கடி படகுத்துறையில் நிறுவப்பட்ட அளவுகோல் பல ஆண்டுகள் ஆனதால் துரு பிடித்தது.

இதனை மாற்ற தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகம் முடிவு செய்தது. பழைய அளவுகோலை அகற்றினர்.

அதன்படி படகுத்துறை சிமென்ட் பீடத்தில் புதிய துரு பிடிக்காத 40 அடி உயர அளவுகோலை நிறுவினர். இதன் மூலம் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தேக்கடிக்கு வரும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தெரிந்து கொள்ளலாம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top