தென் சென்னை பா.ஜனதா வேட்பாளர் இல.கணேசன் மனு தாக்கல்

4bab6076-e6eb-4ec6-921e-a1d4b1feb14c_S_secvpfதென் சென்னை தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் இல.கணேசன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காலை 10.30 மணி அளவில் ராஜா அண்ணாமலைபுரம் அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக புறப்பட்டார். பின்னர் அடையாறில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஆனந்தகுமாரிடம் காலை 11.20 மணிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவரது வேட்புமனுவை கட்சியின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், முன்மொழிந்தார். அப்போது பா.ம.க. மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், தே.மு.தி.க. மாவட்ட தலைவர் வி.என்.ராஜன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வபாண்டியன் ஐ.ஜே.க. பொறுப்பாளர் ஆரூர் சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இல.கணேசன் பெயரில் தொகுதி மக்கள் சார்பாக இன்னொரு வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை எம்.ஜி.ஆரின் ஆடிட்டர் பரமேஸ்வரன் தாக்கல் செய்தார்.

இல.கணேசன் தனது சொத்து மதிப்பாக 25 கிராம் எடை கொண்ட தங்க ருத்ராட்ச மாலையை காட்டினார். இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம். இதுதவிர வங்கியில் ரூ.1 லட்சம் வைப்பு தொகையாகவும் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் சேமிப்பு கணக்காகவும், ரூ.20 ஆயிரம் கைச்செலவுக்காக வைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதன் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்து 7 ஆயிரம் ஆகும்.

மனுதாக்கல் முடிந்ததும் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாட்டில் மோடி தலைமையில் நல்லாட்சி உருவாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதீய ஜனதா வேட்பாளராக தென் சென்னையில் போட்டியிடுகிறேன். எனக்கு ஆண்டவன் அருளும், மக்களின் ஆதரவும், தொண்டர்களின் ஒத்துழைப்பும் உள்ளது. இதன் மூலம் வெற்றி வேட்பாளராக மனுதாக்கல் செய்துள்ளேன். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா சார்பில் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன், கே.டி.ராகவன், ரவிச்சந்திரன், அலங்காரமுத்து, காளிதாஸ், எஸ்.என்.பாலாஜி, லட்சுமி, அணு, பா.ம.க. சார்பில் ஜமுனா கேசவன், மோகன சுந்தரம், ஆறுமுகம், அடையாறு வடிவேல், சைதை சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top