பிரிந்த காதலி அனுஷ்கா ஷர்மாவிற்கு ஆதரவாக பொங்கி எழுந்த விராட் கோலி

virat_kohli_fb__large

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய இந்திய அணி விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. கடினமாக ஆடுதளத்தில் நடைபெற்ற இப்போட்டியில் விராட் கோலி 51 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

விராட் கோலியின் அசாதாரணமான இந்த ஆட்டத்தை பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து தள்ளினர்.

அதேவேளையில் விராட் கோலியின் முன்னாள் காதலியான அனுஷ்கா ஷர்மாவை ரசிகர்கள் சரமாரியாக கேலி செய்தனர். பல சமூக வலைத்தள பக்கங்களில் அவரை ட்ரால் செய்தும், கோலியின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு அனுஷ்கா ஷர்மா அவரை விட்டு பிரிந்ததே காரணம் என்றும் குறிப்பிட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த விராட்கோலி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் காதலியான அனுஷ்கா ஷர்மாவிற்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதில்

நீண்ட காலமாகவே எனது ஆட்டத்தை வைத்து அனுஷ்கா ஷர்மாவை ட்ரோல் செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும். எனது ஆட்டத்திற்கு அனுஷ்கா எந்தவகையிலும் பொறுப்பு அல்ல. அவர் எப்பொழுதும் நேர்மறையாக பேசி எனது ஆட்டத்தை ஊக்கப்படுத்தி தான் வந்தார். இவ்வாறு இருப்பவர்கள் இனிமேலாவது இரக்கம் கொண்டும், அனுஷ்கா ஷர்மாவை மதித்தும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதற்கு முன்னர் உங்களது உறவினர்கள் யாருக்கோ இப்படி நேர்ந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top