உலகக் கோப்பை டி20 அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா: விராட் கோலி அபாரம்

d88c0fda-49e6-419d-92f7-0ff0059ec037_S_secvpfஅரையிறுதிக்கு யார் தகுதி பெறுவது என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதின.

மொகாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் சுமித் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆரோன் பின்சும், கவாஜாவும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினார்கள். கவாஜா அதிரடியாக ஆடி பும்ரா வீசிய 2-வது ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்தார். அஸ்வின் வீசிய 4-வது ஓவரில் பின்ச் 2 சிக்ஸ் அடிக்க ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அந்த அணி 4 ஓவரில் 50 ரன்களை தொட்டது.

5-வது ஓவரில் நெஹ்ரா கவாஜாவை 26 ரன்னில் வீழ்த்தினார். அதன் பிறகு இந்திய பவுலர்கள் சிறப்பாக வீசி ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்கள். வார்னரை 6 ரன்னில் அஸ்வின் வீழ்த்தினார். கேப்டன் சுமித்தை 2 ரன்னில் யுவராஜ் வீழ்த்த ஆஸ்திரேலியா தடுமாற ஆரம்பித்தது.

பின்ச் மற்றும் மேக்ஸ்வெல் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார்கள். ஆனால் பின்ச் 43 ரன்னில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியாவிற்கு ஆபத்தாக திகழ்ந்த மேக்ஸ்வெல் 31 ரன்னில் பும்ரா பந்தில் போல்ட் ஆனார்.

இறுதியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அற்புதமாக பந்து வீசிய நெஹ்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பாண்டிய இரண்டு விக்கெட்டும், யுவராஜ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 12 ரன்களிலும், தவான் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த சுரேஷ் ரெய்னா 10 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

7.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. பின்னர் விராட் கோலியும், யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்தது.

யுவராஜ் சிங் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதுவரை கடைசி 5 ஓவர்களில் இந்திய அணிக்கு 59 ரன்கள் தேவையாக இருந்தது. 3 ஓவர்களில் 39 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அதுவரை ஆட்டம் இருதரப்புக்கும் சாதகமாகவே இருந்தது. பாக்னர் வீசிய 18-வது ஓவரில் விராட் கோலி 2 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுக்கப்பட்டது.

19-வது ஓவரில் மீண்டும் மிரட்டிய கோலி, அந்த ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார். கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை சந்தித்த கேப்டன் தோனி பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை எட்டினார்.

இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. அதிரடியாக விளாடிய விராட் கோலி 51 பந்துகளில் 82 ரன்களும், தோனி 10 பந்துகளில் 18 ரன்களும் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்திய அணி அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிவுடன் வருகின்ற மார்ச் 31-ம் தேதி மோதுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top