63-வது திரைப்பட தேசிய விருதுகள்: சிறந்த தமிழ்ப் படம் ‘விசாரணை’, சிறந்த பின்னணி இசைக்காக இளையராஜா

பாகுபலி

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விசாரணை’ படத்துக்காக சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. சிறந்த பின்னணி இசைக்காக ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இளையராஜாவுக்கு விருது அளித்திருக்கிறார்கள்.

63-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது.

இதில், ‘லாக்கப்’ என்ற நாவலை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விசாரணை’ படத்துக்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் எடிட்டர் கிஷோருக்கு சிறந்த எடிட்டிங்கிற்கான விருது கிடைத்திருக்கிறது. சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதை சமுத்திரக்கனிக்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த பின்னணி இசைக்கான விருதை ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இளையராஜாவுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இளையராஜா இசையில் உருவான 1000வது படம் ‘தாரை தப்பட்டை’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திப் படமான ‘பிக்கு’ படத்தில் நடித்ததிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அமிதாப் பச்சன் பெறுகிறார். ‘தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்’ படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. கடந்தாண்டும் சிறந்த நடிகைக்கான விருதை ‘குயின்’ படத்திற்காக வென்றார் கங்கனா என்பது நினைவுக் கூறத்தக்கது.

சிறந்த நடிகர் : அமிதாப்பச்சன் (பிக்கு)

சிறந்த நடிகை: கங்கனா ராவத் (தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்)

சிறந்த படம்: பாகுபலி

சிறந்த இயக்குநர்: சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி)

சினிமா எடுக்க உகந்த மாநிலம் விருது: குஜராத்

சினிமா எடுக்க உகந்த மாநிலம் சிறப்பு விருது: உத்திரப் பிரதேஷ் மற்றும் கேரளா


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top