அமெரிக்காவின் எமோரி பல்கலைகழக மாணவர்கள் ஊர்வலம்

hq

அமெரிக்காவின் எமோரி பல்கலையில் “ட்ரம்ப் 2016” “வோட் ட்ரம்ப்” மற்றும் வெறும் “ட்ரம்ப்” என்ற வாசங்கள் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப்க்கு ஆதரவாக சுவற்றிலும் சாலையிலும் எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த மாணவர்கள் தங்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியதாக உள்ளாத சொல்லி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினர்.

பல்கலை கழகத்தில் பல மைனாரிட்டி பிரிவை சார்ந்த மாணவர்கள் படித்து வரும் வேளையில், ட்ரம்ப்க்கு ஆதரவாக பல்கலை கழகத்தில் வாசகங்களை பார்த்த மாணவர்கள் தங்களுடைய பாதுகாப்பு குறித்து கவலையாக உள்ளது என்று தெரிவித்தனர். இந்த வாசகங்கள் உடனடியாக சாக் கொண்டு எழுதப்பட்டத்தால் அழிக்கப்பட்டது.

இருந்த பொழுதிலும் எழுதியவர்கள் யார் என்று தெரியாத நிலையில் மாணவர்கள் இவ்வாறு எழுதியவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அனைத்து மாணவர்களும் இணைந்து கைபேசி ஆப் ஒன்றை உருவாக்கினர் இதன் மூலம் ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்து பலகலை கழக மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர்.

கல்லூரி இளம் ஜனநாயக சங்க பிரஸிடண்ட் மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார், இளம் ஜனநாயக சங்க பிரஸிடண்ட் மாணவர்களின் கவலை நியாயமானதே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

மேலும் போராடிய மாணவர்களுடன் இணைந்து ஒரு கடிதம் எழுத இருப்பதாகவும் ட்ரம்ப் போன்றவர்களுகாக பல்கலை வளாகத்தினுள் விளம்பரம் செய்வது தவறாகும் என்று கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top