கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவுடன் தேனி நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் கார்த்திக் போட்டி

karthik-muthuraman-stills013கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவுடன் தேனி நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் கார்த்திக் போட்டியிடுவார் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் பி.கே.எம்.முத்துராமலிங்கம் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில குழு அவசர கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் 18 தொகுதிகளில் போட்டியிடும் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது என்றும், வெற்றிக்கு பாடுபடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

நாடாளும் மக்கள் கட்சியை மீண்டும் தாய் கட்சியான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள நடிகர் கார்த்திக்கை வரவேற்று பாராட்டுகிறோம் என்றும், தேனி தொகுதியில் மட்டும் கட்சியின் சிங்கம் சின்னத்தில் போட்டியிடுவது என்றும், நடிகர் கார்த்திக்கை வேட்பாளராக நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து அவமானப்படுத்தும் அ.தி.மு.க.வுடன் சுயநலத்துடன், ஆதாயத்துடன் தேர்தல் உறவு வைத்துள்ள பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேற்கண்ட தகவலை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் பி.கே.எம்.முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top