தமிழகத்தில் கடும் நடவடிக்கைகள் எடுத்துவரும் தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையம்தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இது வரை 2 லட்சத்து 23634 புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 14 கோடியே 28 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வந்த புகார்களின் அடிப்படையில் 1 லட்சத்து 73718 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top