மோடியின் வானொலி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

மோடிபிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மான் கீ பாத்’  என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றுவது வழக்கம்.

தமிழ்நாடு, மேற்குவங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகளைக் கருத்தில் கொண்டு பிரதமரின் வானொலி நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்படுமா என்கிற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் வழக்கமான இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்ககோரி தேர்தல் ஆணையம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நாடியது. இதற்கு தேர்தல் கமிஷன் தனது ஒப்புதலை அளித்துள்ளது.

5 மாநில தேர்தலில் எவ்விதத்திலும் செல்வாக்கை வெளிப்படுத்தாமலும், வாக்காளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலும் நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top