ஹைதராபாத் மாணவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கிய காவல்துறையை கண்டித்து பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தின் ஒரு மாணவரின் கடிதம்

bsm

ரோஹித்துக்காக சமரசம் இல்லாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஹைதராபாத் மாணவர்களை இன்று காவல் துறை கண்மூடித்தனமாகத் தாக்கி உள்ளது. சனநாயக முறையில் போராடிய மாணவர்களின் மீது இந்த ஆளும் அரசாங்கம் தனது ஏவலாளிகளை  ஏவி விட்டுள்ளது. சனநாயகப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை எதிர்ப்பதை நாம் நம் கண்டனங்களால் மட்டும் நிறுத்திக் கொள்ளக்கூடாது.காவல்துறை தனது காட்டுமிராண்டித் தனம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக கல்லூரி வளாகத்தில் இணையதள இணைப்பை முடக்கி உள்ளது. அதுமட்டும் இன்றி போராடிய மாணவர்களின் அலை பேசிகளைப் பிடுங்கியும் உள்ளது. மாணவிகளின் பொருட்களையும் கொள்ளையர்களைப் போல பிடுங்கி உள்ளது இந்த காவல்துறை.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அப்பா ராவ் வருகையை எதிர்த்து சனநாயக முறையில் போராடிய மாணவர்களின் மீது இந்த காவல் துறை தனது காட்டுமிராண்டித் தாக்குதலை நடத்தி உள்ளது. போராடிய மாணவர்களின் கை கால்களை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளது. போராடிய மாணவர்களிடம் சமூக விரோதியை விடக் கேவலமாகவே காவல்துறை நடந்து கொண்டது. இதைப் படம் பிடித்த மாணவர்களின் அலைபேசிகளை இந்தப் காவல்துறையினர் பிடிங்கி உள்ளனர். ஒரு கட்டத்தில் சில மாணவிகள் சற்றும் அஞ்சாமல் இந்த காட்டுமிராண்டி தனத்தைப் பார்த்து “நீங்கள் யார் எங்களைத் தொட?” போன்ற கேள்விகளை எழுப்புகின்றனர். அந்த மாணவிகளின் ஒரு கேள்விக்குக் கூட இந்த காவல் துறையால் பதில் கூற முடியவில்லை. அவர்களையும் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் சென்றுள்ளனர் இந்த காவல்துறை

அவ்வாறு இழுத்துச் செல்லும் பொழுது அந்த மாணவியின் பைகளை இந்த கொள்ளையர்கள் பிடுங்கி உள்ளனர். இவர்களுக்கு மற்றவர்களை திருடன், கொள்ளைக்காரன் என்று சொல்ல ஒரு யோகியதையும் கிடையாது. இவ்வாறு மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக வெளியேற்றிய பிறகு மாணவர்கள் இந்த காவல்துறை  மீது கல் வீசி தங்கள் போராட்டத்தை தொடர்ந்து உள்ளனர். இந்த ஏவல் மீது அதைத்தான் விட்டெரிய வேண்டும். இதற்காக காத்துக் கொண்டிருந்த இந்த காவல் துறை மாணவர்களின் மீது தடியடி நடத்துகிறார்கள். சில மாணவர்களின் மேல் இந்த காட்டுமிராண்டித்தனமாக பாய்ந்துள்ளது. கொலைகாரனுக்கு பாதுகாப்பு தரும் இந்த காவல்துறை மாணவர்களைத் தொட எந்தத் தகுதியும் இல்லை, யோகியதையும் இல்லை. இனி நாம் நம் போராட்டங்களில் இவர்களுக்கு ஏதிராக கல்களை ஏந்தியே போராட வேண்டும்.

மல்லையாவைப் பிடிக்க வக்கில்லை, ஏழை ,எளிய  மக்களுக்கு எதிராகவும், விவசாயிகளிடமும், மாணவர்களிடமும் தான் தங்கள் பலத்தை காவல்துறை காட்டுகிறார்கள். நாம் நமது ரோஹித்துக்கான போராட்டத்தில் சமரசம் இன்றி போராடுவோம். தொடர்ந்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்திவரும் ஹைதராபாத் மாணவர்களுக்கு ஆதரவும் வாழ்த்துக்களும்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top