உக்ரைன் விமானப்படை பெண் விமானி ரஸ்யச் சிறையில் உண்ணாவிரதம்

2உக்ரைனை சேர்ந்த பெண் விமானி நாடியா சாவன்ஸ்கோ (34 வயது) 2014ம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் ரஸ்ய ஆதரவு போராளிகளால் கடத்தப்பட்டு ரஸ்ய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.  2 இரஸ்ய தொலைகாட்சி நிருபர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இரஸ்ய அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாடியா சாவன்ஸ்கோ உக்ரைன் இராணுவத்தில் தனது 17 வயதில் சேர்ந்தார். உக்ரைன் சார்பாக ஈராக்கிற்கு அனுப்பப்பட்ட ஐ.நாவின் அமைதிப்படையில் பங்கு கொண்ட ஒரே பெண் வீரர் இவர். ஈராக்கில் இருந்து திரும்பி வந்த இவர் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்துடன் நீதிமன்றத்தில் போராடி, விமானப்படை கல்லூரியில் இணைந்து படித்த முதல் உக்ரைன் பெண் இவர். படித்த முடித்த பிறகு விமானப்படையில் நேவிகேட்டராகவும், விமானத்தில் துப்பாக்கியை இயக்கும் விமானியாகவும் உக்ரைன் விமானப்படையில் வேலை பார்த்து வந்தார்.

912014இல் கிழக்கு உக்ரைனில் இரஸ்ய அரசால் ஆதரிக்கப்பட்ட போராளிக் குழுக்கள் கலகம் செய்த பொழுது அதை அடக்கும் படையிலும் அங்கம் வகித்தார். அப்பொழுது இரஸ்ய ஆதரவு போராளிகளால் கடத்தப்பட்டு இரஸ்ய அரசு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அதன் பிறகு இரஸ்ய அரசு தொலைக்காட்சி நிருபர்களை சுட்டுக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இதே போல் சென்ற வருடம் உக்ரைன் இயக்குனர் ஒலேக் செண்ட்சோவ் மீது ரஸ்ய ஆதரவு போராளிகள் மீது தாக்குதல் தொடுத்ததாக வழக்கு பதியப்பட்டு 20 வருடம் கடும் ஊழிய தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

நாடியா மீதான வழக்கு தாமதமாவதை தொடர்ந்து மிகவிரைவில் வழக்கை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தொலைக் காட்சி நிருபர்கள் கொலை செய்ப்படுவதற்கு முன்பாகவே தான் கடத்தப்பட்டதாக நாடியா கூறியுள்ளார், மேலும் இது அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட பொய் வழக்கு என்று கூறியுள்ளார்.

நாடியாவின் தொலை பேசி ஆவணங்கள் தொலைக்காட்சி நிருபர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இவர் இல்லை என்பதை உறுதி செய்கிறது. 10.40மணிக்கு கொலை செய்த இடத்திற்கு நாடியாவின் ஹெலிகாப்டர் வந்து சென்றுள்ளது, கொலை நடந்தது 11 மணியிலிருந்து 12 மணிக்குள் அந்த சமயத்தில் நாடியாவின் மொபைல் அந்த பகுதியில் இல்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கிறது. நாடியாவின் வழக்கறிஞர் இந்த வழக்கின் தீர்ப்பு “கிரம்ளின் மாளிகையிலேயே இருக்கிறது, அவர்களுக்கு தேவையான அரசியல் ஆதயங்களின் படி தீர்ப்பு இருக்கும்” என்று தெரிவித்தார்.

இதே சமயத்தில் சென்ற மாதம் வழக்கை விரைவில் நடத்தி முடிக்கும் படி நாடியா உண்ணாவிரதம் இருந்தார் 5 நாட்களுக்கு பிறகு உக்ரைன் அதிபரின் கடிதம் வந்ததை முன்னிட்டு உண்ணாவிரதத்தை கைவிட்டார். ஆனால் அது பொய் கடிதம் என்பது பின்னர் தெரிந்தது. தற்பொழுது தன்னை உக்ரை நாட்டுக்கு திரும்ப அனுப்பும் வரை உண்ணாவிரதம் என்று கூறி போராட்டம் நடத்தி வருகிறார். தற்பொழுது நாடியா வழக்கின் தீர்ப்பு மார்ச் 22 இன்று வரவிருக்கும் நிலையில் உணவுகளை மட்டும் மறுத்து நீர் அருந்தி வரும் நாடியா, தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

நாடியா தற்பொழுது உக்ரைன் மக்களின் கதாநாயகியாக உள்ளார், உக்ரைனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். நாடியா நீதிமன்ற விசாரணையில் கடைசியாக பேச வாய்ப்பு சட்டப்படி இருந்தும் அதை கொடுக்க மறுத்த பொழுது, இரஸ்ய நீதிமன்றம் ஒரு பாசிச நீதிமன்றம் என்று நீதிமன்றத்திலேயே அறிவித்தார், மேலும் தன் வழக்கறிஞர்களிடம் இந்த விசயத்தை அரசியல் ஆக்கினால் மட்டுமே எனக்கு விடுதலை கிடைக்கும் என்பதை தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top