ரஷ்யா விமான விபத்தில் பலியான பயணிகளுக்கு தலா ரூ.14 லட்சம் உதவி: துபாய் விமான நிறுவனம் அறிவிப்பு

cb56511b-d42d-480f-98c3-c00af1a9a80f_S_secvpfரஷ்யா விமான விபத்தில் பலியான பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.14 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

துபாயில் இருந்து தெற்கு ரஷியாவில் உள்ள ரோஸ்ட்வ்– ஆன்டான் நகருக்கு துபாயை சேர்ந்த பிளை துபாய் நிறுவன பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. ரஷியாவில் ரோஸ்டவ்–ஆன்டான் விமான நிலையத்தில் தரை இறங்கிய போது மோசமான வானிலை காரணமாக விமான நிலைய ஓடு பாதையில் தரையில் மோதி நொறுங்கி தீப்பிடித்தது.

அதில் 2 இந்தியர்கள் உள்பட 62 பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 62 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.14 லட்சம் (20 ஆயிரம் அமெரிக்க டாலர்) உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்தகவலை பிளை துபாய் விமான நிறுவனம் நேற்று அறிவித்தது. இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மிக மிக மோசமாக சேதமடைந்திருப்பதாக ரஷிய விமானத்துறை கமிட்டி துணை தலைவர் செர்ஜி ஷாய்கோ தெரிவித்துள்ளார்.

இதனால் விமானம் விபத்துக்குள்ளான காரணங்களை குறித்து தெளிவான தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top