ரெயிலில் சீட் பிடிப்பதில் பயங்கர மோதல்: மீரட் ரெயில் நிலையத்தில் ஒருவர் கொலை

49ff428e-6777-4cb4-b4cc-22d736289105_S_secvpfரெயிலில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேராடூனில் இருந்து கொச்சிக்கு நேற்று மாலை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ரெயில் நிலையம் அருகே வந்தபோது, இருக்கை தொடர்பாக ஹரித்வாரைச் சேர்ந்த ஜஸ்வீந்தர் என்ற பயணிக்கும் வேறு சில பயணிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மற்ற பயணிகள் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலையில் உத்தரபிதேச மாநிலம் மீரட் ரெயில் நிலையத்தை அடைந்ததும் வெளியில் இருந்து ஆயுதங்களுடன் வந்த நபர்கள் திடீரென உள்ளே புகுந்து தாக்கத் தொடங்கினர். எதிர்தரப்பினரும் பதிலுக்கு தாக்கினர்.

இதில் ஒருவர் கொல்லப்பட்டார். சிலர் படுகாயம் அடைந்தனர். ஜஸ்வீந்தர் என்ற பயணியை ரெயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளனர். அவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

இந்த சம்பவத்தால் மீரட் ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top