‘டொனால்ட் ட்ரம்பின் வெற்றி தென்சீனக் கடலில் ஏற்படக்கூடிய ஆயுத மோதலை விட ஆபத்தானது; பொருளாதார புலனாய்வு

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது உலகம் எதிர்கொள்ளும் முதல் 10 ஆபத்துக்களில் ஒன்று என்று பொருளாதார புலனாய்வு அலகு கூறுகிறது.

pmbஅவர் உலக பொருளாதாரத்துக்கு இடையூறு விளைவிப்பதுடன், அமெரிக்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உருவெடுப்பார் என்றும் அந்த ஆய்வு நிறுவனம் கூறுகின்றது.

ஆனால், அவருக்கு ஜனநாயகக் கட்சியில் இருந்து வரக்கூடிய மிக அதிக வாய்ப்புள்ள போட்டியாளரான ஹிலாரி கிளிண்டனை அவர் வெல்வார் என்று அது எதிர்பார்க்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது மற்றும் தென் சீனக் கடலில் ஏற்படக்கூடிய ஆயுத மோதல் ஆகியவற்றை விட இவரது வெற்றி ஆபத்தானதாக பார்க்கப்படுகின்றது.

துரித பொருளாதார தாமத நிலைக்கு எதிரான சீனாவின் அதீத நடவடிக்கைகள் மற்றும் யுக்ரெய்ன் , சிரியாவில் ரஷ்யாவின் தலையீடு காரணமாக ஏற்படக்கூடிய புதிய ”பனிப்போர்” ஆகியவையும் உலகம் எதிர்கொள்ளக்கூடிய பெரிய ஆபத்துகளாக கருதப்படுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top