சூப்பர் 10 சுற்று நாளை தொடக்கம்: இந்தியா–நியூசிலாந்து முதல் ஆட்டத்தில் மோதல்

0211eaf0-8237-48d4-8b8e-076c6930068a_S_secvpf20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் நேற்று முடிவடைந்தன. இதன் முடிவில் ஆப்கானிஸ்தான். வங்காளதேச அணிகள் ‘சூப்பர் 10’ சுற்றான முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்றன.

‘சூப்பர் 10’ சுற்றில் விளையாடும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘குரூப் 1’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும், ‘குரூப் 2’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்றன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இன்றைய ஓய்வுக்கு பிறகு ‘சூப்பர் 10’ சுற்று நாளை தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் இந்தியா– நியூசிலாந்து (குரூப் 2) அணிகள் மோதுகின்றன. மராட்டிய மாநிலம் நாக்பூரில் இந்தப் போட்டி நடக்கிறது.

இந்திய அணி கடைசியாக விளையாடிய 11 இருபது ஓவர் ஆட்டத்தில் 10–ல் வெற்றி பெற்று முத்திரை பதித்தது. ஆஸ்திரேலியா, இலங்கை தொடர் மற்றும் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்ததால் டோனி தலைமையிளான இந்திய அணி மிகுந்த நம்பிக்கையில் இந்த போட்டியில் களம் காண்கிறது. சமபலத்துடன் காணப்படும் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி பேட்டிங்கில் நிலையாக ஆடி வருகிறார். இதுதவிர ரோகித் சர்மா, ரெய்னா, தவான், கேப்டன் டோனி போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களும், அஸ்வின், நெக்ரா, பும்ரா போன்ற சிறந்த பவுலர்களும் நல்ல நிலையில் உள்ளனர்.

சமீபத்தில் விளையாடிய அணியே 11 பேர் கொண்ட அணியில் ஆடும். மாற்றம் எதுவும் இருக்காது. ரகானே, முகமது ஷமி ஆகியோர் வாய்ப்பை பெறுவது கடினம். நெக்ரா அல்லது பும்ரா ஆகியோரில் ஒருவருக்கு பதிலாகத்தான் ஷமி இடம் பெற இயலும்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடக் கூடியது. கேப்டன் வில்லியம்சன், குப்தில், கோலின் முன்ரோ, ரோஸ் டெய்லர், சவுத்தி, நாதன் மெக்குல்லம் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். அதிரடி வீரர் பிரண்டன் மெக்குல்லமின் ஓய்வு அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நாளைய போட்டி நடைபெறும் நாக்பூர் ஆடுகளம் பேட்டிங்கும் சாதகமாக இருக்கும் என்று ஆடுகள அமைப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் இரு அணிகளும் ரன்களை குவிக்கும். இதனால் ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் நல்ல விருந்தாக அமையும்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: டோனி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, ரெய்னா, யுவராஜ்சிங், ஹர்த்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின், பும்ரா, நெக்ரா, ரகானே, ஹர்பஜன்சிங், முகமது ஷமி, பவான் நெகி.

நியூசிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), குப்தில், டெய்லர், கோலின் முன்ரா, கோரி ஆண்டர்சன், எல்லியாட், சவுத்தி, நாதன் மெக்குல்லம், போல்ட், மெக்லகன், ஆடம் மிலின், ஹென்றி நிக்கோலஸ், ரோஞ்சி, சான்ட்னெர், இஷாசோதி.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top