அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்றால் உலக அளவில் புது சிக்கல்கள் உருவாகும்-அரபு பாதுகாப்பு தலைமை எச்சரிக்கை

utஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி தரப்பில் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் அதிபர் பில்கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி போட்டியிடுகிறார். டிரப்பின் சமீபத்திய  பேச்சுக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால் அது உலக அளவில் புது சிக்கல்களை உருவாக்கும்என அரபு பாதுகாப்பு தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையே நாகரிகங்களின் மோதலுக்கு டிரம்பின் வெற்றி வழிவகுக்கும் என கூறியுள்ள அரபு பாதுகாப்பு தலைமை,

இது குறித்து அரபு பாதுகாப்பு தலைமை ஜெனரல் தமீம் கூறும் போது  இஸ்லாமியர்கள் குறித்த அவரது கருத்துகளே அதை வெளிப்படுத்துவதாக உள்ளது.மேற்கத்திய நாடுகளை இஸ்லாமியர்கள் வெறுப்பதாக டிரம்ப் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் உலகில் யுத்தங்கள் ஏற்பட காரணமாக அமைவது கலாச்சாரமே என அரசியல் விஞ்ஞானி சாமுவேல் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளீண்டனை தோற்கடித்து டிரம்ப் வெற்றி பெறுவாரானால் சாமுவேல் குறிப்பிட்டுள்ள கலாச்சார மோதல்கள் உருவெடுப்பது உறுதி என்றார்.

மத்திய கிழக்கு பகுதிகளில் குறிப்பாக துபாய் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் தனது வணிகத்தை நிலைநாட்ட டிரம்ப் கடுமையாக முனைந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் கடுமையான நெருக்கடி காரணமாக அவை எதிலும் டிரம்பால் வெற்றி காண முடியவில்லை என தெரிய வந்துள்ளது. இந்த காரணங்களே டிரம்பை இஸ்லாமிய விரோதியாக மாற்றியிருக்க வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில் டெனால்டு டிரம்ப்  சிகாகோவில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார். அப்போது, அவரது ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் டிரம்ப் பங்கேற்ற கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top