ஐ.பி.எல். அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் மும்பை-புனே மோதல்

2cfa016b-a161-4e1e-be64-079f2c804c59_S_secvpf8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை நடைபெறும் என்று போட்டி அட்டவணையை வெளியிட்டு ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று அறிவித்தது. ஏப்ரல் 9-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

இறுதி ஆட்டமும் மும்பையிலேயே நடக்கிறது. மொத்தம் 60 ஆட்டங்கள் மொகாலி, டெல்லி, மும்பை, நாக்பூர், புனே, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, ராஜ்கோட், ராய்ப்பூர் ஆகிய 10 நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்சுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் முதல்முறையாக சென்னையில் எந்த ஆட்டமும் நடத்தப்படவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top