மு.க.அழகிரி – எஸ்.வி.சேகர் திடீர் சந்திப்பு!

sv sekar Azhagiri meetingமுன்னாள் மத்திய அமைச்சரும், சமீபத்தில் தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்ட தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரியுடன் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

மு.க.அழகிரி சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் அழகிரி தனது தாயார் தயாளு அம்மாளையும், சகோதரி கனிமொழியையும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று மு.க.அழகிரியை, நடிகர் எஸ்.வி.சேகர் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், ”இந்த சந்திப்பில் அரசியல் ஏதும் கிடையாது. அழகிரி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். இன்று நடைபெறவுள்ள எனது நாடகத்திற்கான அழைப்பு விடுக்கத்தான் வந்தேன்” என்றார். இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top