மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

5f8ff47f-4295-4ad2-af80-75899a87c912_S_secvpfமருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த நினைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மாணவர் சேர்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கொண்டு வரும் முடிவை ரத்து செய்ய மத்திய சுகாதார துறைக்கு உத்தரவிட வேண்டும்.

கிராமப்புற ஏழை மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே அது உதவிகரமாக போய்விடும்.

இது தொடர்பான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தாக்கல் செய்யப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மறுசீராய்வு மனுவை திரும்ப பெற வேண்டும். இந்த மனு மீதான விசாரணை இம்மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.

இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி திறன் மற்றும் நுழைவுத் தேர்வை நுழைக்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு எதிர்ப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மறுஆய்வு மனுவுக்கு எதிராக தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

முன்னதாக ஏற்கனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமருக்கு பலமுறை அவர் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top