முல்லை பெரியாறு அணையில் கண்காணிப்பு கேமராக்கள்: கேரளா அத்துமீறல்

4d21ef84-812d-487b-a6c2-f92cae4e4e26_S_secvpfமுல்லை பெரியாறு அணை தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் தேங்கியிருக்கும் தண்ணீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் உள்ளதால், அணை பராமரிப்பு பணிகளையும் தமிழக பொதுப்பணித்துறை செய்து வருகிறது. இதற்காக செயற்பொறியாளர் தலைமையில் உதவி செயற்பொறியாளர், நான்கு உதவி பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் அணைப்பகுதியில் உள்ளனர்.

கேரள அரசின் நடவடிக்கையால் அணைக்கட்டுப்பாடு முழுவதும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணைப்பகுதிக்கு தினமும் செல்லும் தமிழக பொதுப்பணித்துறையினரிடம் அடையாள அட்டை கேட்பது, தேக்கடியில் கையெழுத்து போட்ட பின் உள்ளே செல்ல அனுமதிப்பது, அணைப்பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைத்து அங்கு நடக்கும் பணிகள் குறித்து கேரளாவுக்கு தகவல் அனுப்புவது போன்றவை நடக்கிறது.

அடுத்தகட்ட நடவடிக்கையாக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அணைப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த கேரள போலீசார் கடந்த சில நாட்களாக ஆய்வு நடத்தி வருகின்றனர். அணைப்பகுதியில் பேபி அணை, ஷட்டர் பகுதி, நீர் கசிவு காலரி, வல்லக்கடவு பாதை உள்ளிட்ட இடங்களில் கேமரா வைக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து தமிழக பொதுப்பணித்துறையினரிடம் அவர்கள் தகவல் தெரிவிக்கவோ, முன் அனுமதி பெறவோ இல்லை.

பெரியாறு அணை செயற்பொறியாளர் மாதவன் கூறும்போது, பெரியாறு அணையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கேரள போலீசார் ஆய்வு மேற்கொள்வது குறித்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top