மத்திய மனிதவள மேம்பாட்டு துறை

dsssகருப்பு பணம் இந்தியாவுக்கு நுழைவதை தடுக்க அன்னிய நேரடி முதலீடு குறித்த தகவல்களை உளவுத்துறையுடன், ரிசர்வ் வங்கி பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தொழில் தொடங்குவதற்கு பெறப்படும் முதலீடுகள் வாயிலாக இந்தியாவுக்குள் கருப்பு பணம் வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அன்னிய நேரடி முதலீடுகளில் கருப்பு பணம் நுழைவதை கட்டுப்படுத்த மத்திய வருவாய்த்துறை அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது.

அண்மையில் பொருளாதார குற்றங்களைத் தடுக்க வழிகாணும் முறைகளை கண்டறிவதற்கான ஆய்வுக்கூட்டம் மத்திய வருவாய்த்துறை அமைச்சக செயலாளர் தலைமையில் டெல்லியில் நடந்தது. இதில் ‘ரா’ அமைப்பு மற்றும் மத்திய உளவுத்துறை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது வெளிநாடுகளில் வரி செலுத்தாமல் மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் முதலீடு செய்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இது கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதற்கு, உளவுத்துறை அதிகாரிகள் தங்களுக்கு இது தொடர்பான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க இயலும் என்றனர்.

இதைத்தொடர்ந்து மத்திய ரிசர்வ் வங்கி அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அதன் முதலீட்டு ஆதாரங்கள் பற்றிய தகவல்களை ரா, மத்திய உளவுத்துறை அமைப்பு மற்றும் தங்களது செயலகத்திடமும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

 

மத்திய அரசு தாராளமய பொருளாதார கொள்கைகளை பெரிய அளவில் விரிவுபடுத்தும் இது போன்றதொரு கண்காணிப்பும், ஆய்வும் அவசியமாகும் என்றும் கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது.

குறிப்பாக வரும் நிதியாண்டில் (2016–17) பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த நடவடிக்கை அவசியம் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக, அன்னிய நேரடி முதலீடுகள் வரும்போது அது எந்த நாட்டில் இருந்து வந்தது, என்னென்ன முதலீடுகளுக்கு வந்துள்ளது என்பது பற்றிய தகவல்களை ரிசர்வ் வங்கி மட்டுமே பதிவு செய்வது வழக்கம்.

எனவேதான் இந்த தகவல்களை ரிசர்வ் வங்கி உளவுத்துறை, ரா அமைப்புகளுக்கு தெரிவிக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் அன்னிய நேரடி முதலீடுகள் பற்றிய தகவல்கள் தொடர்பாக தனது இணையதளத்தில் வெளியிட பரிசீலனை செய்யுமாறும் வருவாய்த்துறை அமைச்சகம் ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top