ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்த விராஜ் மண்டிஸ் ஐநாவை கண்டித்து உரையாற்றினார்

மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்த இன்னர் சிட்டி பிரஸ் மற்றும் மாத்யூ லீ வெளியேற்றப் பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் மற்றும் அனைத்து தரப்பினரும் அழைக்கப்பட்ட கூட்டத்தில் ஜெர்மனியில் இருந்து ஸ்கைப்பின்(Skype) மூலம் பேசிய தோழர் விராஜ் மண்டிஸ்ஸின் உரையின் தமிழாக்கம். (விராஜ் மண்டிஸ் ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர். அடிப்படையில் ஒரு சிங்களவர். எண்பதுகளில் இருந்து ஈழ ஆதரவு தளத்தில் இயங்கக் கூடியவர். டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்தவர். மேலும் அதன் பிறகு பிரேமன் தீர்ப்பாயத்தில் ஏற்பாடு செய்யும் பொறுப்பேற்று வழிநடத்தியவர் ]

 

விராஜ் மண்டிஸின் உரை :

 

maxresdefault

நான் முதலில் என்னை பேச அழைத்ததற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும் இந்த இன்னர் சிட்டி பத்திரிகை மற்றும் மாத்யூ லீ தொடர்பான பிரச்சனையை நீங்கள் பேசுவதை நான் பாராட்டுகிறேன்.

இதுவரை யாரும் செய்யாத அளவில் ஈழத் தமிழர்கள் பிரச்சனையை கையாள்வதில் இன்னர் சிட்டி பத்திரிகையும், மாத்யூ லீயும் மிகவும் சிறப்பாக, தனித்துவமாக இருந்திருக்கிறது. அதனை இந்த உலகத்திற்கு எடுத்துரைப்பதில், அதன் பங்கு, மாத்யூ லீயின் பங்கு வேலை என்பதையும் தாண்டி முக்கியமாக இருந்திருக்கிறது. ஏனெனில் முள்ளிவாய்க்காளுக்கு முந்தைய மிக நெருக்கடியான காலக்கட்டத்தில், மக்கள் சாரை சாரையாக கொல்லப்பட்ட போது, சர்வதேச சமுதாயம் எதையும் செய்யாமல் அல்லது எதையும் செய்ய விரும்பாமல் இருந்த போது, ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளே இருந்து கொண்டு, தமிழக மக்களின் குரலாக இருந்தவர் மாத்யூ லீ. ஐக்கிய நாடுகள் சபையானது தோல்வி அடைந்து இருக்கிறது என்பது அதனது வேலையை செய்யாமல் தவறி இருப்பதில் இருந்து அனைவருக்கும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இன்று அதை வெளிபடுத்தும் இன்னர் சிட்டி பிரஸ் வாயடைக்கப்பட்டு இருக்கிறது.

முள்ளிவாய்க்காளுக்கு முந்தைய காலக்கட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபை கொடுத்த தவறான, முன்னுக்குப் பின் முரணான புள்ளிவிவரங்களை எதிர்த்து தொடர்ந்து அதற்கு மிகவும் நெருக்கடி தரக்கூடிய கேள்விகளை கேட்டுக் கொண்டு இருந்தவர் மாத்யூ லீ. உலக பத்திரிக்கைகளில் வந்த இறந்த எண்ணிக்கை, காயப்பட்ட மக்களின் எண்ணிக்கை, உணவுப் பொருட்களின் எண்ணிக்கை எதுவுமே ஒன்றோடு ஒன்று ஒத்து போயிருக்கவில்லை. அடிப்படை கணக்கே மிகவும் தவறாக இருந்தது.  ஐக்கிய நாடுகள் சபை நினைத்து இருந்தால் அதனை வெகு எளிமையாக கணக்கினை கொடுத்து இருக்க முடியும். ஆனால், அதனை ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து மறைத்து வந்தது. ஆனால், அந்த நேரத்தில் தொடர்ந்து அது குறித்த கேள்விகளை எழுப்பிய முக்கிய பங்கை மாத்யூ லீயும், இன்னர் சிட்டி பிரஸ்ஸும் செய்தது. அதற்காக ஈழத்தமிழர்களும், தமிழக தமிழர்களும் மாத்யூ லீக்கும், இன்னர் சிட்டி பிரஸ்ஸுக்கும்  கடமைப்பட்டவர்களாக இருக்கின்றனர். இந்த நேரத்திலே நான் இதனை சொல்வதற்கு காரணம் என்னவெனில், ஐக்கிய நாடுகள் சபையில், இனப்படுகொலை நடந்து ஆறேழு, வருடங்களுக்குப் பிறகு, பல்வேறு தீர்மானங்களுக்குப் பிறகு, பல்வேறு விவரங்களுக்குப் பிறகு இப்போது தான் உண்மை நிலை வெளிவரத் தொடங்கி இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையமே சர்வதேச விசாரணை தேவை, அவசியம் என்று சொல்லியிருக்கிறது. ஆனால், இப்போது அதற்கு எதிரான வேலையையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. மேலும் தடுத்துக் கொண்டு இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை போருக்கு பின் மீண்டும் தோற்றுக் கொண்டு இருக்கிற வேளையிலே இந்த இன்னர் சிட்டி பிரஸ் வெளியேற்றப்பட்டு இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்த இன்னர் சிட்டி பிரஸ்ஸால் முடியும். எடுத்துக்காட்டாக முருகன், நளினி போன்றவர்கள் இருபத்து ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அவர்களது மனித உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது.

இன்னர் சிட்டி பிரஸ்ஸுக்கு இது தொடர்பான தகவல்கள் கிடைத்தால் அவர்களுக்கான உரிமைக் குரலை ஐக்கிய நாடுகள் சபையில் பதிய வைக்க முடியும். அதற்கான எல்லா முகாந்திரங்களும் இந்த வழக்கில் உள்ளது. எனவே, இன்னர் சிட்டி பிரஸ் வெளியேற்றப் பட்டு இருப்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த மக்களுக்கான மனித உரிமைகள் சார்ந்த குரலை நெரிப்பதாக இருக்கிறது. இன்னர் சிட்டி பிரஸ் வெளியேற்றப்பட்டு இருப்பதற்கு எதிரான இணையதள புகாரில் ஆயிரம் பேர் தான் அதிக பட்சம் கையெழுத்து இட்டுள்ளனர். தமிழர்கள் நினைத்தால் பல ஆயிரம் கையெழுத்துக்களை பத்து நிமிடங்களில் போட முடியும். அதனை நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் கேட்டு கொள்கிறேன். என்னை அழைத்ததற்கு நன்றி.

இன்னர் சிட்டி பிரஸ் வெளியேற்றப்பட்டு இருப்பதற்கு எதிரான இணையதள புகாரில் கையெழுத்து இட

தமிழாக்கம் – குயிலி கால்வின்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top