பெரியாறு அணையில் வனத்துறை நிபந்தனைகளுக்கு தமிழக அதிகாரிகள் கட்டுப்பட வேண்டும்: கேரளா மீண்டும் நிபந்தனை

f94f2118-79a6-483b-808a-1acc3ff782a9_S_secvpfமுல்லைப் பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் வனத்துறை நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என கேரள அரசு கூறியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விஷயத்தில் கேரள அரசு தொடர்ந்து தமிழக அதிகாரிகளுக்கு இடையூறு அளித்து வருகிறது.

அணையில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு செல்லும் தமிழக அதிகாரிகளிடம் அடையாள அட்டை கேட்டும் கையெழுத்திடச் சொல்லியும் கேரள வனத்துறை நிர்பந்தம் செய்து வருகிறது.

இதற்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கையெழுத்து போட்டு சென்று வருகின்றனர்.

கேரள வனத்துறையின் இந்த அத்துமீறல் குறித்து தமிழக பொதுப்பணித்துறை சார்பில் கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் தமிழக அரசுக்கு எழுதிய பதில் கடிதத்தில் பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் பார்வையாளர்கள் மட்டுமே. எனவே கேரள வனத்துறையினரின் நிபந்தனைகளுக்கு தமிழக அதிகாரிகள் கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கேரள தலைமைச் செயலரின் இந்த கடிதம் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இது குறித்து பெரியாறு அணை போராட்ட குழுவினர் கூறுகையில் தமிழக அரசு பொதுப்பணித்துறையின் சிறப்பு உபகோட்ட அலுவலகம் பெரியாறு அணையில் உள்ளது. தொடக்கத்தில் அந்த அலுவலகத்தில் ஒரு உதவி செயற்பொறியாளர், 2 உதவிப் பொறியாளர்கள், 3 இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு அதிகாரியும் அங்கு தங்குவதில்லை.

கம்பத்தில் உள்ள பெரியாறு அணை சிறப்பு கோட்ட அலுவலகத்தில் இருந்து அணைக்கு சென்று திரும்புகின்றனர். தமிழக அதிகாரிகள் அங்கு தங்கி பணி செய்யாததினாலேயே கேரள தலைமைச் செயலர் இவ்வாறு கடிதம் அனுப்பியுள்ளார்.

பெரியாறு அணைப்பிரச்சினையில் உடைமையை இழந்தோம். இனி உரிமையையும் இழந்து விடாமல் இருக்க அங்குள்ள சிறப்பு உபகோட்ட அலுவலகத்தை மீண்டும் இயங்கச் செய்வதுடன் அதிகாரிகள் அணையில் தங்கி பணிபுரிய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top