மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் செரினா வில்லியம்ஸ்!

serena williams miami open 2014மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சீனாவின் லீ நா-வைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்காவின் மியாமி நகரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செரினா வில்லியம்ஸ், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் லீ நா-வை எதிர்கொண்டார்.

லீ நா முதல் செட்டில் செரினாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்த போதிலும், அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் செரினா வில்லியம்ஸ் போராடி கைப்பற்றினார். இரண்டாவது செட்டின் ஆரம்பம் முதலே செரினா தாக்குதல் ஆட்டத்தை மேற்கொள்ள, அதை எதிர்கொள்ள முடியாமல் லீ நா திணறினார்.

இதனால் இரண்டாவது செட்டும் 6-1 என்ற கணக்கில் செரினாவின் கைவசமானது. முடிவில் 7-5, 6 -1 நேர் செட்டுகளில் செரினா லீ நா-வை வீழ்த்தி சாம்பியன் பட்டதை தட்டிச்சென்றார்.

மயாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் செரினா வில்லியம்ஸ் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top