ஏழு தமிழர் விடுதலை விவகாரம்: தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி கருத்து

Rajiv-Gandhi-assassination-case-convicts-released--Nasim_SECVPFடெல்லியில் நேற்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை அறிவித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியிடம், ஏழு தமிழர் விடுதலை செய்யும் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டு இருப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘இந்த பிரச்சினை எங்கள் பார்வைக்கு வரும் போது, இந்த விவகாரம் வாக்காளர்களிடம் செல்வாக்கை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் கமிஷன் உரிய நிலைப்பாட்டை மேற்கொள்ளும்’’ என்றார்.

மத்திய அரசின் கருத்தை கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதி இருக்கும் பிரச்சினை குறித்து உள்துறை அமைச்சகம் தேர்தல் கமிஷனை அணுகுமா? என்று கேட்டதற்கு, ‘‘இப்போதுள்ள நிலையில் அதுபற்றி தேர்தல் கமிஷன் யூகம் செய்ய முடியாது’’ என்று நசீம் ஜைதி பதில் அளித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top