ஏப்ரல் 2-ல் சோனியா ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல்!

Sonia Gandhiஉத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் கடந்த 3 நாடாளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி கண்டார். இந்த முறையும் அதே தொகுதியில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேபரேலி தொகுதியில் அடுத்த மாதம் ஏப்ரல் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 2ஆம் தேதி துவங்குகிறது. எனவே அன்றைய தினமே தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்காக விமானம் மூலம் லக்னோ செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் ரேபரேலி சென்று, தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top