நரேந்திர மோடி முதல்மந்திரியாக இருந்தபோது தற்போதைய குஜராத் முதல்வர் மகளுக்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்தார்

kmகுஜராத்தில் முதல்– மந்திரி மகளுக்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்த அரசு பசு பாதுகாப்பு இயக்கத்துக்கு அதிக விலைக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குஜராத் முதல்–மந்திரியாக இருந்த நரேந்திர மோடி பிரதமரானதைத் தொடர்ந்து மாநில வருவாய்த்துறை மந்திரியாக இருந்த ஆனந்தி பென்படேல் முதல்–மந்திரியாக இருந்து வருகிறார். தற்போது அவர் முறைகேடு புகாரில் சிக்கியுள்ளார்.

குஜராத்தின் கிர்ரெனப் பகுதியையொட்டியுள்ள அரசு நிலம் ஆனந்தி பென் படேலின் மகளுக்கு சொந்தமாக நிறுவனத்துக்கு ஓட்டல் கட்டுவதற்காக குறைந்த விலைக்கு வழங்கப்பட்டுள்ளது. 422 ஏக்கர் நிலம் 91.6 சதவீத தள்ளுபடியில் சதுரமீட்டர் ஒன்றுக்கு ரூ.15 விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2010–ம் ஆண்டு இந்த ஒதுக்கீடு நடந்துள்ளது. அப்போது நரேந்திர மோடி முதல்– மந்திரியாகவும், ஆனந்திபென் படேல் வருவாய்த்துறை மந்திரியாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இந்த இடத்துக்கு அருகே உள்ள அம்ரேலியில் முரளிதர் காவ் சேவா டிரஸ்ட் நடத்தும் பசு பாதுகாப்பு இயக்கத்துக்கு அரசு விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இங்கு ஒரு சதுர மீட்டர் நிலம் ரூ.671 விலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

முதல்–மந்திரி மகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் சதுரமீட்டருக்கு ஸ்டாம்ப் கட்டணம் ரூ.180. ஆனால் அதற்கு 91.6 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது. பசு பாதுகாப்பு இயக்கத்துக்கு அளித்த நிலத்துக்கு சதுர மீட்டருக்கு கூடுதலாக ரூ.190 ஸ்டாம்ப் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இந்த இரு நிலத்தின் விலையையும் மாநில அரசின் குழு நிர்ணயம் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இந்த பாரபட்சம் முதல்–மந்திரி மகளுக்கு சலுகை விலையில் நிலம் வழங்கியது ஏன் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top