எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ஈரான் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 44 தமிழக மீனவர்கள் விடுதலை

ஈரான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக பல்வேறு நாட்களில் அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 44 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

வளைகுடா நாடுகளில் உள்ள பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை மேற்கொண்ட முயற்சியின் பலனாக 44 தமிழக மீனவர்கள் மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை ஈரான் அரசு அபராதம் ஏதும் விதிக்காமல் விடுவித்துள்ளதாக தெற்காசிய மீனவர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான சர்ச்சில் தெரிவித்துள்ளார்.

ஈரான் சிறைகளில் இருந்து இன்று விடுதலையாகியுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் நாளை விமானம் மூலம் தாய்நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top