இஷ்ரத் ஜகான் வழக்கு; குஜராத் போலீசுக்கு எதிரான கிரிமினல்வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது

இஷ்ரத் ஜகான் வழக்கில் குஜராத் போலீசுக்கு எதிரான கிரிமினல் வழக்கை நிராகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

reகுஜராத்தில் கடந்த 2004–ம் ஆண்டு, அப்போதைய முதல்–மந்திரி நரேந்திர மோடியை கொலை செய்ய முயன்றதாக கூறி இஷ்ரத் ஜகான் என்ற இளம்பெண் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., இது ஒரு போலி என்கவுண்ட்டர் எனக்கூறி போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால் மும்பை தாக்குதல் வழக்கில் சமீபத்தில் வாக்குமூலம் வழங்கிய டேவிட் ஹெட்லி, இஷ்ரத் ஜகான் ஒரு லஷ்கர்–இ–தொய்பா அமைப்பை சேர்ந்தவர் என கூறியிருந்தார். டேவிட் ஹெட்லியின் வாக்குமூலத்தை அடுத்து குஜராத் போலீசுக்கு எதிரான கிரிமினல் வழக்கை நிராகரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

இவ்விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.சர்மா வாதிட்டபோது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ். தாகூர் மற்றும் யு யு லலித் அடங்கிய பெஞ்ச், “இதனை பட்டியலிடுங்கள், இவ்விவகாரத்தை பின்னர் பார்ப்போம்,” என்று கூறிஉள்ளது.

டேவிட் ஹெட்லியுடைய வாக்குமூலமானது இஷ்ரத் ஜகான் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஆள்தான் என்பது முடிவாகிஉள்ளது என்று சர்மா கூறிஉள்ளார். குஜராத் போலீஸ் டி.ஐ.ஜி. டி ஜி வான்சாரா உள்பட போலீஸ் அதிகாரிகள் என்கவுண்டரில் அவர்களுக்கு உள்ள தொடர்பு விவகாரமாக மராட்டியத்தில் விசாரணையை எதிர்க்கொண்டு வருகின்றனர். மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க சிறையில் இருக்கும் டேவிட் ஹெட்லி வீடியோ கான்ப்பரன்ஸ் மும்பை சிறப்பு கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கையில்,

இஷ்ரத் ஜகான் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்தான் என்று கூறிஉள்ளான்.

ஆகவே விசாரணை பிடியில் இருக்கும் டேவிட் ஹெட்லியின் வாக்குமூலத்தை நம்பி இந்த வழக்கை நீதிபதிகள் பட்டியல் இட்டிருப்பது சர்ச்சை ஆகலாம் என்று சில வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top