செலவு அறிக்கைகள் அவர்களின் தெளிவற்ற நிலையை காட்டுகிறது.பொது பட்ஜெட் குறித்து மன்மோகன் சிங்;

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்) நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பல தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்திய பொருளாதார சீர்திருத்த சிற்பி என்று அழைக்கப்படும் மன்மோகன் சிங் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை பற்றி கூறியதாவது:-

பட்ஜெட் கலவையாக உள்ளது. பெரிய யோசனைகளை எதுவும் பட்ஜெட்டில் முன்வைக்கப்படவில்லை. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட விஷயங்களில் முக்கியமானது 2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவது. இதை எப்படி சாதிக்க போகிறார்கள் என்று எந்த ஒரு திட்டத்தையும் முன் வைக்கவில்லை. இதை சாதிக்க வேண்டுமானால் வேளாண்துறையின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் 14 சதவீதம் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகரிக்க வேண்டும். இது நிறைவேற்ற முடியாத கனவு.

கடந்த ஆண்டு அருண் ஜெட்லி குறிப்பிட்ட விஷயங்களை இந்த ஆண்டும் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது நல்ல விஷயம். ஆனால் அவர் வெளியிட்ட செலவு அறிக்கைகள் அவர்களின் தெளிவற்ற நிலையை காட்டுகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

1991-ம் ஆண்டு மன்மோகன் சிங் நிதி மந்திரியாக இருந்த போது சமர்ப்பித்த பட்ஜெட் இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வித்திட்டதுடன், இந்தியாவின் மிகச் சிறந்த பட்ஜெட்டாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top