இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய செயற்கைக்கோள் மூலம் செயல்படும் செல்போன் செயலி

நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டால், இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டறிய உதவும் செல்போன் செயலியை இந்திய மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். இது ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது.

சிக்ஸ் சிக்மா ஹை ஆல்டி டியூட் மெடிகல் சர்வீசஸ் பார் ரெஸ்க்யூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரதீப் பரத்வாஜ்தான் இந்த செயலியைக் கண்டுபிடித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

pmநிலநடுக்கத்தின்போது சிக்கிக் கொள்பவர்களை மீட்க கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த செயலி செல்போன் இணைப்போ இணையதள இணைப்போ இல்லாமலேயே செயல்படும். செயற்கைக்கோள் மூலம் செயல்படும் இந்த செயலி, தொடர்ந்து சமிக்ஞைகளை பரிமாறிக் கொண்டே இருக்கும்.

இந்த சமிக்ஞைகளை வைத்து சம்பந்தப்பட்ட நபர் எங்கிருக்கிறார் என்பதை சிறப்புக் கருவி மூலம் 50 கி.மீ. சுற்றளவுக்குள் இருப்பவர்கள் கண்டுகொள்ள முடியும். ஆனால் பிறரை தொடர்புகொள்ள முடியாது.

இந்த செயலியை ஆபத்து காலங்களில் பயன்படுத்த மத்திய அரசும், நேபாளம் உள்ளிட்ட சில நாடுகளும் அனுமதித்துள்ளன.

உயர்வான மலைப்பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் செயலிழந்தாலோ, இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ அங்கு சிக்கியவர்களை மீட்கவும் இந்த செயலி உதவும்.

இதுவரை இந்த செயலியைப் பயன்படுத்தி இதுவரை 5,600 பேரை காப்பாற்றி உள்ளோம். குறிப்பாக நேபாள நிலநடுக்கத் தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருந்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top