தாய்லாந்தில் பிரதமரை கண்டித்து பொதுமக்கள் பேரணி!

thailand rallyபிரதமர் இங்க்லக் ஷினவத்ராவை பதவி விலகக் கோரி தாய்லாந்தில் இன்று ஏராளமான பொதுமக்கள் மாபெரும் பேரணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய்லாந்து நாட்டில் தற்போதைய பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா கடந்த 2006-ம் ஆண்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட அவரது சகோதரர் தஷினுக்கு ஆதரவாக செயல்படுகின்றார் என்றும் அவரும் பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்றும் கடந்த நவம்பர் மாதம் முதலே அந்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நாளடைவில் தீவிரமடைந்த போராட்டங்களால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காபந்து அமைச்சராக அதே பதவியில் இங்க்லக் தொடர்ந்தார். மக்களின் எதிர்ப்புகளையும் மீறி பிப்ரவரி 2-ம் தேதி அங்கு பொதுத் தேர்தலையும் நடத்தினார்.

ஆனால் போராட்டக்காரர்கள் பல இடங்களில் வேட்பாளர்களைப் போட்டியிடவிடாமல் தடுத்தும், வாக்குப்பதிவை நிறுத்தியும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதால் இந்தத் தேர்தல் செல்லாது என்று அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.தினந்தோறும் ஆர்பாட்டக்காரர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டங்களால் தலைநகரிலும் அதனை சுற்றியிருந்த பகுதிகளிலும் அவசர நிலைப் பிரகடனம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.

எதிர்த்தரப்பு போராட்டங்கள் சற்றே தொய்வுற்றிருந்த நிலையில் இந்த மாதத்தின் மத்தியில் அவசரநிலை உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக தாய்லாந்தின் போராட்டக்காரர்கள் தலைநகரின் வீதிகளில் இறங்கியுள்ளனர்.லும்பினி பூங்காவில் இருந்து ஆறு வழிகளில் செல்லும் இந்தப் பேரணி உறுப்பினர்கள் பிரதமரைப் பதவி விலகுமாறும், இடைக்கால மக்கள் குழுவொன்றை நியமித்து பொதுத் தேர்தலை நடத்தவேண்டும் என்றும் கூறி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top