இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 79 படகுகளை ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் விடுவிக்கவில்லை.

இதுதொடர்பாக மீனவர்கள் பல கட்டமாக போராட்டம் நடத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று (26–ந் தேதி) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.

இதன் காரணமாக ராமேசுவரத்தில் இருந்து 3 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவை கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதுதவிர வருகிற 29–ந் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரக அலுலகத்தை முற்றுகையிடவும் மீனவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

போராட்டம் குறித்து மீனவர் சங்க தலைவர் போஸ் கூறியதாவது:–

பறிமுதல் செய்யப்பட்ட 79 படகுகளும், இலங்கை கடற்கரையில் சேதமடைந்து கிடக்கின்றன. இவற்றின் மதிப்பு ரூ.20 கோடி ஆகும். படகுகளை பறிகொடுத்த மீனவ குடும்பத்தினர் வறுமையில் வாடி வருகிறார்கள்.

மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கத்தவறிய மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top