அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்யும் ஒருவர் தொழிற்சாலை பணியாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

rreசம்பவம் குறித்து கன்சாஸ் நகர ஷெரீஃப் டி.வால்டன் கூறும்போது, “கன்சாஸில் உள்ள எக்ஸெல் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார் செட்ரிக் ஃபோர்டு (38). இவர் தனது தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இச்சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக, தொழிற்சாலைக்கு வரும் வழியில் நியூட்டன், ஹெஸ்டன் ஆகிய நகரங்களிலும் இரண்டு பேர் மீதும் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

எக்ஸெல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் எங்களுக்கு தகவல் வந்ததையடுத்து போலீஸார் அவரை சுற்றிவளைத்து சுட்டு வீழ்த்தினர்” என்றார்.

காயமடைந்தவர்கள் வெஸ்லி மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் அவ்வப்போது இத்தகைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் துப்பாக்கி அனுமதி வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top