கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு‌களுக்கு கட்டணச் சலுகை: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை

Captureகிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பணபரிவர்த்தனைக்கு சேவை கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை‌ ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் போது வசூலிக்கப்பட்டு வந்த சேவைக்கட்டணம், கூடுதல் கட்டணம், அட்டைக்கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதிக அளவிலான பணப்பரிவர்த்தனைகள் அனைத்தையும் இணையதளம் மற்றும் அட்டைகள் மூலம் மேற்கொள்வதை கட்டாயமாக்கவும் மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. மின்னணு முறையில் நடத்தப்படும் பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் நேரடியாக பணத்தை செலுத்தும் போது ஏற்படும் வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கிலும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top