வாழ்வதற்கு தகுதியான இடம்: சென்னைக்கு 150 வது இஅடம்

உலக அளவில் வாழ்வதற்கு உகந்த இடங்களின் பட்டியலில்,  நமது சென்னை 150 இடத்தில் உள்ளது.

Chennai, train station

Chennai, train station

பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமான மெர்ஜர் வெளியிட்டுள்ள பட்டியலில், இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உலக அளவில் வாழ்வதற்கு உகந்த இடங்களில், வியன்னா (ஆஸ்திரியா) முதலிடத்தில் உள்ளது. ஜூரிச் (ஸ்விட்சர்லாந்து), ஆக்லாந்து (நியூசிலாந்து), மூனிச் (ஜெர்மனி), வான்கோவர் (கனடா) ஆகிய நகரங்கள் முறையே 2 முதல் 5ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.
லண்டன் 39ஆவது இடத்தையும், பாரீஸ் 37ஆவது இடத்தையும், நியூயார்க் 44ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்தியாவில் ஹைதராபாத் நகரம் முதலாவதாக இருக்கிறது.  அந்நகரம் உலக அளவில் 139ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கடுத்து, புணே (144), பெங்களூரு (145), சென்னை (150), மும்பை (152), கொல்கத்தா (160) ஆகிய நகரங்கள் உள்ளன.
ஆசியக் கண்டத்தில், சிங்கப்பூர்தான் முதலாவதாக இருக்கிறது. உலக அளவில் சிங்கப்பூர் 26ஆவது இடம்பெற்றுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top