நெல்லையில் கிட்டப்பா போலி என்கவுன்டர்: போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே உள்ள கான்சாபுரத்தை சேர்ந்த சுப்புக்குட்டி மகன் கிட்டப்பா (வயது 34). இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. கிட்டப்பாவை பிடிக்க பாளை உதவி கமிஷனர் மாதவன் நாயர், சப்–இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், போலீசார் கிருஷ்ணசாமி, சரவணசுந்தர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

wqqqqஇந்நிலையில் கடந்த 13.6.2015–ம் தேதி சுத்தமல்லி கே.எம்.ஏ. நகர் அருகில் கட்டுமான வேலை நடக்கும் நாசர் என்பவரது வீட்டில் கிட்டப்பா கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு கிட்டப்பா உடன் அவரது நண்பர்கள் நரசிங்கநல்லூர் லெப்ட் முருகன், ராமையன்பட்டி மணிகண்டன் ஆகியோர் இருந்தனர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் கிட்டப்பா இறந்தார். அவரது கூட்டாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிட்டப்பாவை போலீசார் பிடித்து வைத்து கொன்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி இசக்கியம்மாள் நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது, பாளை உதவி போலீஸ் கமிஷனர், துணை போலீஸ் சூப்பிரண்டு, சப்–இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட 11 பேர் மீதும் மற்றும் கிட்டப்பாவின் நண்பர் ஒருவர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்ய கடந்த 8–ந்தேதி உத்தரவிட்டார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசார், புகார் கூறப்பட்ட பாளை சட்டம்–ஒழுங்கு போலீஸ் உதவி கமிஷனர் மாதவன், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், சப்–இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சண்முகவேல், ஏட்டு தங்கம், போலீசார் சரவணசுந்தர், கிருஷ்ணசாமி, ஆல்வின்பாபு, கருப்பசாமி, முருகன், முருகேசன் மற்றும் கிட்டப்பாவின் நண்பர் செல்வம் என்ற செல்வநாதன் ஆகிய 12 பேர் மீது வழக்கு பதிந்தனர்.

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 342 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்), 323 (சிறு காயம் ஏற்படுத்துதல்), 506(1) (மிரட்டல்), 506(2) (கொலை மிரட்டல்), 302 (கொலை செய்தல்), 201 (கொலையை மறைத்தல்), 35 (ஒன்றாக சேர்ந்து திட்டம் போடுதல்) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top