பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை 110–வது விதி அறிவிப்பால் நிறைவேற்ற முடியாது: கனிமொழி

a3daa778-bb63-475a-b6f0-7d18aff40455_S_secvpfதிருச்சியில் இருந்து சென்னை திரும்பிய தி.மு.க. எம்.பி. கனிமொழி இரவு விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுகளில் 110 விதிகளின் கீழ் சட்டசபையில் நூற்றுக் கணக்கான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். இவைகளில் எந்த அறிவிப்பும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

தற்போது ஆட்சி காலம் முடிவடையும் நேரத்தில் அவசரம் அவசரமாக பல அறிவிப்புகளை 110 விதியின் கீழ் வெளியிட்டு உள்ளார்.

சட்டசபை தேர்தல் ஓரிரு மாதங்களில் வர உள்ளன. அதற்குமுன் இந்த அறிவிப்புகளை நிறைவேற்ற வாய்ப்பே இல்லை.

பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு அறிவித்து உள்ளார். அந்த அறிவிப்பும் வெற்று அறிவிப்பாகத்தான் தெரிகிறது.

ஏனென்றால் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கு முறையான சட்டதிருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்து அதன்மீது விரிவான விவாதம் நடத்த வேண்டும். அரிதி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.

அதன்பின் கவர்னர் ஒப்புதல் பெற்று சட்டமாக்க வேண்டும். தற்போது அவசரம் அவசரமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதை வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அமுல்படுத்த முடியுமா? என்பது சந்தேகம். ஏனென்றால் உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கு குறுகிய காலம்தான் உள்ளது.

எனவே இந்த புதிய பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை புதிதாக வரையறை செய்ய வேண்டும். அதற்கெல்லாம் பல மாதங்கள் ஆகும். அதனால் இது வெற்று அறிவிப்புதான்.

பாராளுமன்ற பட்ஜெட் தொடரில் தமிழக மீனவர் பிரச்சினை, தமிழக பிரச்சினை, தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசின் கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகிய பிரச்சினைகளை வலியுறுத்துவோம்.

ஜெயலலிதா தனது 2011–ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் கச்சத்தீவை மீட்போம் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் இன்று வரை அதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படித்தான் 5 ஆண்டு ஆட்சி நடந்து உள்ளது.

இவ்வாறு கனிமொழி கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top