அம்பத்தூரில் உலக தாய் மொழி நாள் பேரணி

சென்னை அம்பத்தூரில் உலக தாய் மொழி நாள்  பேரணி நடைபெற்றது. இந்திய பொதுவுடமை கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மே பதினேழு இயக்கம், தமிழர் விடுதலைகழகம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினர் கலந்து கொண்டனர். தமிழே கல்வி மொழி, தமிழே ஆட்சி மொழி என்ற முழக்கங்களையும் இந்தி திணிப்பிற்கு எதிராக போராடி உயிர்கொடுத்த தாளமுத்து நடராசன், அரங்க நாதன் உள்ளிட்டவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மேலும் பேரணியில் பங்கெடுத்தவர்கள் தமிழ் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்

DSC00020DSC00024DSC00028DSC00037DSC00038DSC00039DSC00044DSC00045DSC00048

. பேரணி அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளியில் துவங்கி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. மேலும் அலங்கரிக்கப்பட திருவள்ளுவர் சிலை பேரணி முழுவதும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் நாள் ‘தாய்மொழி நாளாக’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில், “உருது மொழி’ அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள், கோரிக்கை தெரிவித்தனர்.

கடந்த, 1952, பிப்., 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, யுனெஸ்கோ அமைப்பு, 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top