நேபாளத்திற்கு ரூ‌.1,500 கோடி‌ நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு!

பிரதமர் மோடிநேபாளத்தில், கடந்தாண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தினால், பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு பணிகளுக்காக இந்தியா ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியை முதற்கட்டமாக வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி‌ அறிவித்துள்ளார்.

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் கேபிஎஸ் ஒலி, டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். ‌அப்போது, கலாச்சாரம்,‌ போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்தில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு பணிகளுக்காக இந்தியா உதவிகளை தொடர்ந்து வழங்கும் என்றார்.

பிரதமர் மோடியைத்‌ தொடர்ந்து பேசிய நேபாள பிரதமர் கேபிஎஸ் ஒலி, பரஸ்பரம் ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்களை சரிசெய்யவே தாம் இந்தியா வந்துள்ளதாக‌ தெரிவித்தார். நரேந்திர மோடியை சந்தித்து பேசியிருப்பதன் மூலம், தமது பயணத்தின் நோக்கம் நிறைவேறியிருப்பதாகவும், கேபிஎஸ் ஒலி கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top